#BREAKING: ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மேலும் நாடு முழுவதும் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகின்ற ஜூலை 1 முதல் 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறாமல் உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது என்று கேள்வி வெகுவாக எழுந்து வந்தது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும். ஜூன் 1ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை :
ஜூன் 1- மொழிப்பாடம்
ஜூன் 3- ஆங்கிலம்
ஜூன் 5- கணிதம்
ஜூன் 6- விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8- அறிவியல்
ஜூன் 10- சமூக அறிவியல்
ஜூன் 12- தொழிற்பிரிவு தேர்வு
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025