ரூபாய் 2,77,40,00,00,000 தனி நபர் கடன் பெற்று தமிழகம் 2ஆம் இடம்..!!
நாட்டில், தனிநபர் கடன்கள் அதிகமாக வழங்கப்படும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
வீட்டுக் கடன், கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதான கடன், கிரெடிட் கார்ட் மீதான கடன் உள்ளிட்டவை தனிநபர் கடன் பிரிவின் கீழ் வருகின்றன. இந்நிலையில், தனிநபர் கடன்கள் தொடர்பான அகில இந்திய அளவிலான புள்ளிவிவரத்தை சிபில் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, தனிநபர் கடன் அதிகமாக வழங்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு ரூ. 5,50,200 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இம்மாநிலத்தில் ரூ. 2,77,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் கர்நாடகா உள்ளது. இங்கு ரூ. 2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 3 மாநிலங்களில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த தனிநபர் கடன்களில் 40 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய மக்கள்தொகையில் 20 சதவிதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன. இதேபோல், 10 பெரிய மாநிலங்களில் மொத்த தனிநபர் கடன் ரூ. 21,27,400 கோடி ஆகும் என்று சிபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
DINASUVADU