சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாறு தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.
ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்பின் பேசிய முதலமைச்சர், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது.
எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. ஜப்பான் நிறுவன முதலீடுகளுக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாக விளங்குகிறது. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாறு தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். 2 ஆண்டில் ரூ.5,596 கோடி முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 5 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு மேலும் பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜப்பான் நாட்டில் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகளவில் பெறும் நாடு இந்தியா தான். மேலும், மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் எனவும் ஒசாகா முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றினார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…