முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு! ஒசாகா முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை!

mkstalin Osaka Conference

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாறு தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு.

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்பின் பேசிய முதலமைச்சர், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. தொழில், பொருளாதார மேம்பாட்டுக்கு முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது.

எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. ஜப்பான் நிறுவன முதலீடுகளுக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாக விளங்குகிறது. சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கமாறு தொழிலதிபர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.  2 ஆண்டில் ரூ.5,596 கோடி முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 5 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு மேலும் பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வுக்கு ஜப்பான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜப்பான் நாட்டில்  அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை அதிகளவில் பெறும் நாடு இந்தியா தான். மேலும், மருத்துவம், உணவு, மின் வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஜப்பான் முதலீடுகளை வரவேற்கிறோம் எனவும் ஒசாகா முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்