இந்திய அளவில் 2வது மிக பெரிய பொருளாதாரம் தமிழகம் தான்… அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி.!

Minsiter Thangam Thennarasu

இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில திட்டக்குழு அலுவலகத்தில் திட்டக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பிறகு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து, தமிழகத்தின் பொருளாதார நிலையினை எடுத்துரைத்தார்.

அவர் கூறுகையில், இந்திய அளவில் மிக பெரிய பொருளாதாரத்தில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ள்ளது என குறிப்பிட்டார், மேலும், கடந்த 2021 – 2022ஆம் ஆண்டில் தமிழகத்தின் நடப்பு உற்பத்தி மதிப்பு 14,53,321 கோடியாக உள்ளது. அதே போல 2022 -2023 ஆண்டில் தமிழகத்தின் நடப்பு உற்பத்தி மதிப்பு 23,64,514 கோடியாக உயர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது என குறிப்பிட்டார்.

இந்திய அளவிலான பொருளாதார மதிப்பீடான GDPயில் தமிழகம் 8.7 சதவீதத்தை கொண்டுள்ளது. இது 2021-2022ஆம் ஆண்டிற்கானது, நடப்பு ஆண்டிற்கான மற்ற மாநில GDP தரவுகள் நம்மிடம் இல்லை எனவும், விலைவாசி உயர்வை பொறுத்தமட்டில் இந்திய அளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றப்பட்டாலும், தமிழகத்தில் பெரிய அளவில் ஏற்றம் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார். அதே போல , இந்திய அளவிலான பணவீக்கத்தை ஒப்பிடுகையில், தமிழகத்தின் பணவீக்கம் என்பது குறைவாகவே உள்ளது.

தனி நபர் வருமானத்தை பொறுத்தவரையில், தமிழக அளவில், கடந்த 2021-2022ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1,54,557 ரூபாய் என உள்ளது . 2022-2023இல் 1,66,767 ரூபாய் என உள்ளது. அதுவே இந்திய அளவில், 2021-2022ஆம் ஆண்டில் 92,583 ரூபாய் எனவும், 2022-2023 ஆம் ஆண்டில் 98,374 ரூபாய் எனவும் உள்ளது.

தமிழக பொருளாதார நிலை மதிப்பீட்டில் கடந்த 2011 -2012 காலகட்டம் முதல் 2017-2018 காலகட்டம் வரையில் தமிழக பொருளாதார நிலை ஏற்றம் இறக்கங்களை கொண்டுள்ளது. அதனை அடுத்து 2018, பின்னர் கொரோனாவுக்கு பிறகு, தமிழக பொருளாதாரம் மீண்டுள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவின் பொருளாதர நிலை எதிர்மதிப்பீட்டில் சென்ற போது கூட தமிழகம் கொஞ்சம் நேர் மதிப்பீட்டில் தான் இருந்தது என்றும், கடந்த 2 ஆண்டுகளில் தமிழக்தின் பொருளாதாரம் 8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது என்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்