தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் – செங்கோட்டையன்

தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும் என தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன், கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் என்ன மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து பட்டியலிட்டு பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள் தான் ஆளும், வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது என்று தெரிவித்தார். இதற்கு பேரவையில் திமுக உறுப்பினர்களும் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தார்கள். செங்கோட்டையனின் கருத்து சட்டமன்றத்தில் முக்கியமான அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025