குகேஷ் உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயது குகேஷ், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” 18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷிற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது.உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது” எனவும் ஸ்டாலின் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Congratulations to @DGukesh on becoming the youngest-ever World Chess Champion at 18!
Your remarkable achievement continues India’s rich chess legacy and helps Chennai reaffirm its place as the global Chess Capital by producing yet another world-class champion.
Tamil Nadu is… pic.twitter.com/YK6p2GDYUT
— M.K.Stalin (@mkstalin) December 12, 2024