‘உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது’ – கமலஹாசன் ட்வீட்..!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள், பத்ம விருதுகள் பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பத்மபூஷண் விருது பெறும் தமிழரான டாடா குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன், தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் வாழும் கூகிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கும்,
பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் தமிழர்களான கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ஷெனாய் இசைக்கலைஞர் பண்டிட் எஸ். பாலேஷ், சமூக சேவகர் எஸ். தாமோதரன், பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, சதிர் நடனக்கலைஞர் விராலிமலை ரா. முத்துக்கண்ணம்மாள், கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.
கிளாரினெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி. நடராஜன், மருத்துவர் வீராசாமி சேஷய்யா, புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் ஏ.வி.முருகைய்யன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது. (3/3)
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2022