உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை ஓமந்தூராரில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையினை சற்று மணி நேரத்திற்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடார். இங்கு கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 350 படுக்கைகள் உள்ளனர்.
இதையெடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது ,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மக்கள் நிறைந்த பகுதிகளில் கொரோனாவை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே என முதல்வர் பழனிசாமி கூறினார்.
மேலும் 144 தடை உத்தரவு என்பது மக்களையும், நாட்டையும் பாதிகாப்பதற்கே, 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம் என கூறினார்.
மேலும் கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னீசியன்ஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…