கொரோனா பரவுவதில்லை “தமிழகம் முதல் ஸ்டேஜில் உள்ளது” – முதலமைச்சர் பழனிச்சாமி .!

Default Image

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை ஓமந்தூராரில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனையினை சற்று மணி நேரத்திற்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடார். இங்கு கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக 350 படுக்கைகள் உள்ளனர்.

இதையெடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை டி.எம்.எஸ்  வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது ,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மக்கள் நிறைந்த பகுதிகளில் கொரோனாவை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா ஒரு கொடிய தொற்று என்பதால் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கட்டுப்பாடு அறையை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் முதற்கட்டத்திலேயே உள்ளது. கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்வதே என முதல்வர் பழனிசாமி கூறினார்.

மேலும் 144 தடை உத்தரவு என்பது  மக்களையும், நாட்டையும் பாதிகாப்பதற்கே, 144 தடை உத்தரவின்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பதே மிக மிக முக்கியம் என கூறினார்.

மேலும் கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1500 லேப் டெக்னீசியன்ஸ் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்