ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் உள்ளது என முதல்வர் பேச்சு.
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் ஹுண்டாய் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஹுண்டாய் தொழிற்சாலையை நவீன மயமாக்கல், மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் உள்ளது. வாகன தயாரிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தற்போது மின்வாகன உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு முக்கிய காரணம்
மின் ஊர்தி வாகன உறத்தியிலும் தமிழ்நாட்டை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக செயல்படுவார் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…