இந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடம் – விஜயபாஸ்கர் தகவல்
இந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடம் என்று விஜயபாஸ்கர் தகவல்.
கொரோனா நோயாளிகள் இணையதளம் மூலம் மருத்துவர்களிடன் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி ஓ.பி.டி. திட்டத்தின் மூலம் நாட்டிலேயே அதிகம் பேர் பலன் அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவனி ஓபிடி திட்டத்தில் தமிழகத்தில் 6,471 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது செய்தியாளர்களை சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.