ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது – எம்.பி.கனிமொழி
ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது.
பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழக்தையே உலுக்கி உள்ள நிலையில், இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், எம்.பி.கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். இந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!’ என பதிவிட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த முருகவேல் எஸ்.ஐ. பாலு மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 1, 2021