உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழகம் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை பல்லாவரத்தில், ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார். 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் இந்த பூங்கா மைந்துள்ளது.
இந்த பூங்காவை உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக தொழில்துறையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நமது தொழில்துறையும் பயணம் செய்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தில் உலகத்தரத்தில் கட்டமைப்பு வசதிகள் காணப்படுகிறது. உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழகம் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும்.
இந்த வேகத்தை பார்க்கும் போது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்களது இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டே போகிறது. வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளோம். உலக முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருகை புரியவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.