தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் தமிழ்நாடு! – முதலமைச்சர் ஸ்டாலின்
தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேற்றம்.
சென்னை நந்தபாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், புத்தாக்க கண்காட்சியை பார்த்து பிரமித்தேன், அமைப்பாளருக்கு பாராட்டுகள்.
தமிழகத்தில் தொழில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதை கொண்ட சேருங்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14ம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தமிழகம் அனைத்து தொழில்களிலும் அதிவேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மிக சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவதற்கு பாராட்டுகள் என்றும் கூறினார். 1,240 புதிய தொழில் நிறுவனங்கள், தொழில் காப்பகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன என்றும் இந்த நிதியாண்டின் இறுதியில் புத்தாக்கம், புத்தொழில் குறித்த இரண்டு மாநாடுகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.