தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது- பிரதமர் மோடி

நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும் என பிரதமர் மோடி உரையில் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். உள்நாட்டிலேயே தயாரான அர்ஜுன் மார்க் 1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாடு பீரங்கி தயாரிப்பிலும் மையமாக திகழ்கிறது. நாட்டின் வட எல்லையை பாதுகாக்க தமிழகத்தின் அர்ஜூன் டாங்கி உதவும் என கூறினார்.
பாதுகாப்பு துறையில் தற்சார்பை ஊக்குவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறோம். 2 பாதுகாப்பு துறை தொழில் பெருந்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. எல்லையை பாதுகாக்க அர்ஜூன் டாங்கி என்கிற வீரனை அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன். அர்ஜூன் டாங்கியில் பயன்படுத்தும் வெடிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலை மறந்துவிட முடியாது என நினைவுகூர்ந்தார். புல்வாமாவில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்றும் இந்தியா பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.