வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது – முதல்வர் மு.க ஸ்டாலின்
தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒன்றை சாளரம் முறையும் பின்பற்றப்பட்டு வருவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்.
ஐஐடியின் உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில் செய்வதற்கு ஏற்றதாகவும், வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என தெரிவித்தார்.
மின்வசதி மற்றும் திறன்மிகு பணியாளர்கள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாக இருக்கும் என்றும் தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒன்றை சாளரம் முறையும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை இந்தியாவில் இருந்து அதிக அளவு மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது என்றும் புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில் முனைவோருக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது எனவும் குறிப்பிட்டார்.