தமிழகம் தடுப்பு பணியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது – செங்கோட்டையன்!

Default Image

தமிழகம் தடுப்பு பணியில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க கூடிய நிகழ்ச்சி சென்னையை அடுத்த பல்லாவரத்தின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் 107 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கொரோனா பணிகளில் தமிழகம் சிறந்து பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

மேலும், முன்னோடி மாநிலமாக கொரோனா தடுப்பில் தமிழகம் விளங்குகிறது எனவும் பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களை பாராட்டி உள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்பதை தற்போது கூறுவதாகவும், கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது இருப்பினும் மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்