மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது – முதல்வர்

மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக தமிழகம் உள்ளது. அரசின் நடவடிக்கையால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியுள்ளார். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2021-22 ஆம் ஆண்டு முதல் புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தற்போதுள்ள 3,250 மருத்துவ இடங்களுடன் புதிதாக 1,250- இடங்களுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளார். மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 32,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025