சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்.
இந்தியாவிலேயே அனைவரும் விரும்பி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலளித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் கூறுகையில், சாதி கலவரங்கள், மத கலவரங்கள் போன்ற வழக்கமான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரிய பாதுக்காப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவித்தார். இதனிடையே, அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில் நடந்த பிரச்னை உட்கட்சி விவகாரம் , வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம், உள்ளே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என முதல்வர் தெரிவித்திருந்தார்.
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…