அதிர்ச்சியில் தமிழ்நாடு.! தரமற்ற உணவில் நமக்கே முதலிடம்.! ஆய்வுத் துறை எச்சரிக்கை..!

Default Image

தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பட்டு ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சு தன்மை அதிகமாக இருப்பதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையம் (FSSAI), சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தற்போது பாதுகாப்பற்ற உணவுகளை தமிழகத்தில் தான் அதிகம் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தில் 2018-19-ஆம் ஆண்டில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உணவுகளில் தரம் குறைவாகவும், 12.7 % சதவீத உணவுகள் பாதுகாப்புற்றதாகவும் இருக்கிறது.
பின்னர் உணவு தரம் பார்க்கும் சோதனையில் தமிழகத்தில் சுமார்  5,730 விதமான உணவு பொருட்கள் சோதனையில் 728 வகையான உணவுகளில் தரம் குறைவாகவும், கலப்படம் அதிகம் உள்ளதாகவும் தெரியப்பட்டது. இதனால் மக்கள் வெளியில் சென்று சாப்பிடும் பொருட்களில் கலப்படம் இருப்பதாலும், அல்லது உணவு பொருட்களை வாங்கும் போது கவனமாக பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்