சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை.! அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் ஆய்வு.!
கொரோனா பரிசோதனைகளை சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அண்டை நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்துள்ளன.
இதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு அறிகுறி இருப்பதற்காக சந்தேகிக்கும் நபர்களுக்கு மற்றும், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து நாடுகளில் இருந்து வருவோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து அனைத்து சர்வதேச விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கொரோனா பரிசோதனைகளை சென்னை விமானநிலையத்தில் நேரில் ஆய்வு செய்தார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.