இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் – டாட்டா குழும தலைவர்
இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் பேச்சு.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள, தொழில் 4.0 என்ற தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.