அவ்வை நடராஜன் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் பிரபல தமிழறிஞருமான அவ்வை நடராஜன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.
இவரது மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ‘தலை சிறந்த தமிழறிஞர் அன்புச் சகோதரர் முனைவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தமிழ் பேராசிரியர், துணை இயக்குநர், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் என பல பதவிகளை வகித்ததோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சிக் காலத்திலே தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமலேயே அரசுச் செயலாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் திரு. அவ்வை நடராஜன் அவர்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்திலே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணி அளப்பரியது. தமிழ்நாடு ஒரு மகத்தான தமிழ் அறிஞரை இழந்துவிட்டது. திரு. அவ்வை நடராசன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாது பேரிழப்பு ஆகும். திரு. அவ்வை நடராஜன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…