தமிழகத்துக்கு குறைந்த அளவே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது…! உயர்நீதிமன்றம் அதிருப்தி…!

தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், அதிகரித்து வருவதை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களை கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அனைத்து மக்களுக்கு போதுமான அளவு தடுப்பூசி, தமிழக அரசிடம் இல்லை.
இந்நிலையில், தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்துக்கு போதுமான அளவு தடுப்பூசியை ஒதுக்கீடு செய்யுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.