ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு டி.ஐ.ஜியாக பதிவு உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பி.ஆர்.வெண்மதி, பி.அரவிந்தன், வி.விக்ரமன், சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்ட 10 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, டி.மகேஷ்குமார், என்.தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகியோருக்கும் பதிவு உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஆனந்தகுமார் சோமானி, ஆர்.தமிழ்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழக அரசு.
மேலும், தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜியாகவும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐபிஎஸ் அதிகாரிகள், வி.ஜெயஸ்ரீ, பி.சாமுண்டீஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஸ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்எஸ் முத்துசாமி, எம்என் மயில்வாகனன் ஆகியோருக்கும் ஐ.ஜியாகவும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கான பணியிடங்களை தமிழ்நாடு அரசு விரைவில் அறிவிக்க உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.