தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்வாகி பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒருபக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,937 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1101 ஆகவும் உள்ளது. பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வு செய்யப்படுமா என்று மே 3 க்கு பிறகு அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் காவல்துறை இரவு, பகலாக பணிபுரிந்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கண்டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் காவல்துறைக்கு போதுமான ஓய்வு கிடைப்பதில்லை, நேரத்துக்கு உணவு கிடைப்பதில்லை. காவலர்கள் மக்களுக்காக மிக கடுமையாக நேரங்களிலும் பணிபுரிந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் காவலர்களை அதிகப்படுத்த அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

35 minutes ago
இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

1 hour ago
பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

2 hours ago
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

3 hours ago
இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

3 hours ago
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை! இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை! 

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

3 hours ago