தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில்,அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.இதனிடையே தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதிதாக டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் முதல்கட்டமாக 630 மினி கிளினிக்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.காலை 8 -12 மணி வரையும், மாலை 4- 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்.இந்த மினி கிளினிக்கல் ஹீமோகுளோபின் ,சர்க்கரைநோய் பரிசோதனை, மகப்பேறு,ரத்த அழுத்த பரிசோதனை ,காய்ச்சல், சளி போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…