நாளை தமிழ்நாடு ஆளுநர் டெல்லி பயணம்!
டெல்லி செல்லும் ஆளுநர் அடுத்த நாள் மாலை தான் சென்னை திரும்புகிறார்.
நாளை தமிழ்நாடு ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை மதியம் 1.30 மணிக்கு டெல்லி செல்லும் ஆளுநர் அடுத்த நாள் மாலை தான் சென்னை திரும்புகிறார். ஆளுநருக்கு எதிராக திமுக குடியரசு தலைவரிடம் புகார் தெரிவித்திருக்கும் நிலையில், ஆளுநரின் டெல்லி வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனிடையே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் இன்று சந்தித்து, தமிழ்நாடு ஆளுநர் குறித்து முறையிட்டுள்ளனர்.