பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர்..!
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார்.
நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க உத்வேகம் தரும் உரை மற்றும் இளைஞர்களுடனான உடனடி இணைப்பிற்காக பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க உத்வேகம் தரும் உரை மற்றும் இளைஞர்களுடனான உடனடி இணைப்பிற்காக பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். @PMOIndia
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) July 29, 2022