தமிழக ஆளுநர் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் -ம் கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எல்லை மீறுகின்ற ஆளுநர்களின் தலையில் ஒரு குட்டு வைத்துள்ளது. ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்கு தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.
உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்லியிருக்கிறார்கள். ஆளுநர் ரவி முன்பே இதை தெரிந்து வைத்திருக்கலாம். அல்லாது இவர் தெரிந்தும் தெரியாதது போல நடித்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.
அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.. ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு..
ஆளுநர் மசோதாக்களை எதையும் செய்யாமல் தனது கையில் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டு காலமாக ஆளுநர் தமிழக சட்டமன்றம் அனுப்பிய பல சட்டங்களை தனது கையில் வைத்திருந்தார். இது எவ்வளவு பெரிய குற்றம். இது அரச குற்றம். ஒரு அரசுக்கு எதிரான குற்றம் என தெரிவித்துள்ளார்.
ஒரு தேர்தெடுக்கப்பட்ட அரசை அதனுடைய செயல்பாடுகளை செய்ய விடாமல் ஆளுநர் தடுத்து வருகிறார். ஆளுநர் ராஜினாமா செய்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. எனவே ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் அவரது பதவிக்கு அழகு என தெரிவித்துள்ளார்.