இன்று டெல்லி புறப்படுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தது. இதனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
போதைப்பொருள் வாங்குவதற்காக பெற்ற பிள்ளைகளை விற்ற கொடூர பெற்றோர்..!
அப்போது, ஆளுநர் மாளிகை சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரு சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊழல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளதாகவும், மேலும் சில மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கின் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 19ம் தேதி ஆளுநர் ஆர்என் ரவியின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மீண்டும் டெல்லி செல்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ரவி நாளை இரவு சென்னை திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.