மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வார கால பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மாலை ஆளுநர் ரவி டெல்லி சென்றடைந்தார்.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ரவி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே, தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே செந்தில் பாலாஜி விவகாரத்தில் இருந்த கருத்து வேறுபாடு அமித்ஷா தலையீட்டில் தான் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டது.
அதன் பிறகு கூட, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு இசைவாணை வழங்க வேண்டும் என ஆளுநருக்கு ஒப்புதல் கோப்புகள் அனுப்பி அவர் கையெழுத்திடாமல் இருக்கிறார் என தமிழக சட்டத்துறை அமைச்சர் கடிதம் எழுத, அதற்கு ஆளுநர் மாளிகை கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு வந்து சேரவில்லை என கூறியது. ஆளுநர் பதிலுக்கு ஆளுநர் மாளிகைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு, அதனை ஆளுநர் மாளிகை ஊழியர்கள் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டுகள் வெளியிடப்பட்டன.
இப்படி தமிழகத்தில் தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே முற்றல் மோதல் போக்கு நிலவி வரும் வேளையில் தற்போது ஆளுநர் ரவி – மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்டுகிறது.
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…
சென்னை : பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும், அதற்கு மாற்றாக சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள…
சென்னை : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…
தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி…