முதல்வர் நல்ல மனிதர்.! திராவிட மாடல் காலாவதியான ஐடியா.! ஆளுநர் ரவி பரபரப்பு பேட்டி.!

Governor RN Ravi and MK Stalin

திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியான ஐடியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம் செய்துள்ளார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி, தனியார் செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டி தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேச தொடங்கப்பட்டுள்ளது. அவர் அளித்த பேட்டியில் திராவிட மாடல் என்பது காலாவதியான ஐடியா என குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

திராவிட மாடல் எனும் காலாவதியான ஐடியா , இந்தியாவின் ஒரே நாடு ஒரே கொள்கைக்கு எதிரானது என ஆளுநர் ரவி பேசியுள்ளார். அடுத்து அண்மையில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , ஆளுநர் மாளிகை செலவீனங்கள் குறித்து பேசிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

அடுத்து, சித்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா குறிப்பிட்ட ஆளுநர், அந்த பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை முதல்வர் நியமிப்பது போல மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை ஆளுநர்கள் தான் நியமிக்க வேண்டும். அப்போது தான் அதில் அரசியல் இருக்காது.

துணை வேந்தர்களை முதல்வர் நியமித்தால் அரசியல் புகுந்துவிடும். கல்வியில் அரசியல் புகுந்ததால் தான், 1950-60களில் இருந்த தமிழக கல்வி நிலை தற்போது இல்லை பின்தங்கியுள்ளது எனவும் தனது விமர்சனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி முன் வைத்தார். தற்போது பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் (கல்லூரி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்) தலைமை செயலகத்தில் நடக்கிறது எனவும் ஆளுநர் குற்றம் சாட்டினார்.

அடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு தனிப்பட்ட மோதல் எதுவும் கிடையாது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. முதல்வர் நல்ல மனிதர். நான் முதல்வரும் நல்ல நட்புடன் தான் இருக்கிறேன் எனவும் அந்த பேட்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்