ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக தமிழக ஆளுநர் அண்ணாமலையா.? அல்லது ஆர்.என்.ரவியா.? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தொடர் தற்கொலை சம்பவங்களை தடுக்க, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் நிரந்தர தடை விதிக்க தமிழக அரசு சட்ட மசோதாவை இயற்றியது.
சட்ட மசோதா :
கடந்த அக்டோபர் மாதம் இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இன்னும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார், ஆளுநர் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
அண்ணாமலை கருத்து :
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரியான விளக்கத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை என கூறியிருந்தார். அண்ணாமலை கூறிய கருத்துக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் யார் ? :
அதில், தமிழக ஆளுநர் அண்ணாமலையா அல்லது ஆ.என்.ரவியா.? ஆளுநர் சட்ட மசோதா ரகசியங்களை அண்ணாமலையிடம் பகிர்ந்து கொள்கிறாரா.? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை இந்த 4 மாத காலத்தில் மட்டும் 12 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட வரி பணம் :
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழக அரசுக்கு எதுவும் வரி பணம் வரவில்லை. எனவும், மத்திய அரசுக்கு வேண்டுமானால் ஏதேனும் வரி வரலாம் அது எங்களுக்கு தெரியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். ஏற்கனவே,ஆந்திரா , தெலுங்கானா மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துளளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…