ஆளுநர் ரவி செயல்படுகிறார். அவர் பாஜகவின் கைப்பாகையாக செயல்படுகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய். மோடி தமிழகத்தை ஏமாற்ற நினைக்கிறார். – வைகோ குற்றசாட்டு.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்க்கு மரியாதை செலுத்திவிட்டு மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து தமிழக ஆளுநர், பாஜக, பிரதமர் மோடி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ரவி செயல்படுகிறார். அவர் பாஜகவின் கைப்பாகையாக செயல்படுகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய். மோடி தமிழகத்தை ஏமாற்ற நினைக்கிறார். தமிழகத்தில் பாஜக வேரூன்ற முடியாது அது நடக்காது. திமுக தலைமையில் உள்ள அணி தான் மீண்டும் ஆட்சி பணியில் அமரும் என வைகோ தெரிவித்தார்.
பின்னர், ராஜீவகாந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலை ஆன நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுத்த மத்திய அரசு பற்றி கேட்கபட்டபோது, வைகோ கூறுகையில், 32 ஆண்டுகள் எந்த குற்றமும் செய்யாமல் அவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். இந்த மறுசீராய்வு மனு நியமில்லாத ஒன்று.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் மறைந்த பிரபாகரனை பற்றி பேசுகையில், நான் அவரோடு 23 நாட்கள் ஒரே இடத்தில் போர் நடைபெற்று கொண்டிருக்கும் போது இருந்துள்ளேன். அவர் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் என்னையும் குறிப்பிட்டு தான் எழுதி இருந்தார். என வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…