ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி பேட்டி.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் எனவும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21-ஐ தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை.
மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 51ஏ பிரிவுக்கு எதிரானது இல்லை என கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்று வருகின்றனர்.
அந்தவகையில், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, இந்த தீர்ப்பானது தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டு வழக்கில் வரலாற்று தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு வழக்கில் கிடைத்த தீர்ப்பு தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு சிறந்த வழக்கறிஞர்களை வைத்து சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுள்ளது. ஒருமித்த தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…