அரசின் அலட்சியத்தால் தமிழகப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை என அண்ணாமலை விமர்சனம்.
பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக இருந்துவிட்டதால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள்.
புதுச்சேரி சார்பில் மாணவர்கள் பங்கேற்கின்றனர், ஆனால் தமிழகம் சார்பில் அணி தேர்வு செய்யப்படாததற்கு பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு தான் காரணம் என கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.
விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பு நம் மாணவர்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.<
/p>
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…