தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி… ஏ.கே.எஸ். விஜயன் 3-வது முறையாக நியமனம் .!
தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன்
மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது முறையாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதி என்பவர், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அரசு ரீதியான அனைத்து ஏற்பாடுகளையும், அலுவலக வேலைகளையும் செய்பவர்.
தமிழக அமைச்சர்கள், முதல்வர் டெல்லிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ளும் போதும் தேவையான நடவடிக்கைகளை இவரே செய்கிறார். கடந்த 2021இல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற போது, ஜூன் மாதம் ஏ.கே.எஸ்.விஜயன் முதன்முறையாக டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு இரண்டாவது முறையாக 2022 ஜூன் மாதமும் தற்போது, அவரது பதவிக்காலம்(ஓராண்டு) முடிந்துள்ள நிலையில் 3-வது முறையாக மீண்டும் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.