தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் ஒரு ஆண்டுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பொன்மாணிக்கவேல் பணிக்காலம் நவம்பா் 30-ம் தேதி உடன் முடிந்த நிலையில் சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த சனிக்கிழமை பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.
அதற்கு பதிலளித்த பொன்மாணிக்கவேல் எனது பதவி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்றம் தான் என்னை நியமித்தது நீதிமன்றம் உத்திராவிட்டால் ஆவணங்களைஒப்படைப்பேன். இதனால் தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது என கூறினார்.
இந்நிலையில், இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்களை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் பொன்மாணிக்கவேலுக்கு ஒரு மின்னஞ்சல் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கும்படி கூறியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்களைத் தொகுக்கும் பணி நடைபெறுகிறது. அப்பணிமுடிவடைந்ததும் சிலை கடத்தல் தடுப்புப் அதிகாரிகளிடம் ஆவணங்கள் விரைவில் ஒப்படைப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து இன்று பொன் மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…