தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை மலர்… முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.!

தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை மலரை இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் சாதனை மலரை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தமிழக அரசின் சாதனை மலர்,செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள், உரைகள் இந்த சாதனை மலரில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் காணொளி தொகுப்பினையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். ஏற்கனவே திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாளை முதல் 3 நாட்கள் திமுக சார்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025