தமிழக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் என வேலை செய்கிறது – பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக அரசு எந்த வேலை செய்தலும் கூட 20% கமிஷன் கேட்கிறார்கள். வேலையை முடித்தபிறகு 4% கமிஷனை கேட்கிறார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் கட்சி சார்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் மாநிலம் அமைதியாக இருக்கும். பயங்கரவாதம் தலைதூக்க எல்லா விதமான சூழ்நிலையும் இருக்கின்றது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக அரசு கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என 3C-க்கு வேலை செய்து வருகிறது. தமிழக அரசு எந்த வேலை செய்தலும் கூட 20% கமிஷன் கேட்கிறார்கள். வேலையை முடித்தபிறகு 4% கமிஷனை கேட்கிறார்கள். ஒரு குடும்பம் அவர்களே அனைத்தை பணத்தையும் வாங்கி கொள்கிறார்கள். இதனால் தான் கட்சியை சேர்ந்த கிளை கழகச் செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை.
அதனாலதான் நான் கட்டுப்பணம், கமிஷன் பணம், கரப்ஷன் பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். தமிழகம் இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தமிழக மக்களும் கேள்வி கேட்கும் நிலை வந்துவிட்டது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் நான்கு மாதங்களில் தமிழக மக்களே பேசத் தொடங்குவார்கள்.
மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடு தோறும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தி வரும் திட்டத்திலும் தமிழகத்தில் திமுக கரப்ஷன் செய்கிறது என தெரிவித்தார்.