குளத்தில் குளிக்காதீங்க.. மூளையை தின்னும் அமீபா! அரசு கடும் எச்சரிக்கை.!

TN govt - Brain-eating amoeba

சென்னை : அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த அமீபாவால் கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி, சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் நீர்நிலைகளை சுத்திகரிக்கவும், தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஏரிகள், குளங்கள் போன்ற தேங்கி நிற்கும் நீர்நிலைகளை சுற்றிலும் சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து, மாயத்தோற்றம், குழப்பம் மற்றும் வலிப்பு போன்ற மூளைக்காய்ச்சல் அறிகுறிகளில் அடங்கும்.

இந்த பாதிப்புகளை கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மூன்றாம் நிலை பராமரிப்பு மையங்களுக்கு நிர்வாகத்திற்காக பரிந்துரைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்