தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கலியாகவுள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக பணியிடங்களுக்கு இன்று மதியம் 1.00 மணி முதல் வரும் செப். 18ம் தேதி மதியம் 1.00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கியது. இப்பணியிடங்களுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் http://arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது.
இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் சிரமத்துக்குள்ளானர். ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இணையதளத்தை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறினர். அந்தவகையில் முடங்கிய இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…