10 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை.. ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கூடுதலாக 10 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே துறைக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் பலரும் தங்களின் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் மாணவர்கள், தொழிலார்கள் என பலரும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு கூடுதலாக 10 ரயில்களை இயக்குமாறு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது.