தமிழக அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் ..! ராமதாஸ்
தமிழக அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், காவிரி பாசன மாவட்டங்களில் தமிழக அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். ஈரப்பதம் சற்று அதிகமாக இருந்தாலும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.