ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் நடைபெற்றது. அப்போது, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 முறை நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்றும் கூறியுள்ளனர். இதனால் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு தர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. ராஜேந்திர பாலாஜியின் வழக்கில் இன்று முதல் 45 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…