கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் தனிப்படை அமைத்து இந்த கொலையில் குமாரி மாவட்டத்தை சார்ந்த அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தால் வழக்கு குறித்து 15 நாளில் மத்திய உள்துறைக்கு தெரிவிக்கவேண்டும்.
மேலும் இந்த வழக்கை என்.ஐ .ஏ க்கு விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. எனவே வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு என்.ஐ .ஏ க்கு அனுப்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து வில்சன் கொலை வழக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என கூறப்படுவதால் விசாரணையை என்.ஐ .ஏ ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று நாகர்கோவில் நீதிமன்றம் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தஃபீக்கை 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த நீதிபதி இருவரையும் 10 நாள்கள் போலீசார் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கொடுத்து உள்ளது.
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…