ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் – விஜயகாந்த்
மூன்றாவது அலையில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா மூன்றாவது அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். மூன்றாவது அலையில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா மூன்றாவது அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மூன்றாவது அலையில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ஊரடங்கு தளர்வுகளை, தமிழக அரசு கடுமையாக்க வேண்டும்.@CMOTamilnadu pic.twitter.com/jxO7VZuSJ3
— Vijayakant (@iVijayakant) July 6, 2021