தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி

பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களை தயாரிக்கும் துறை பொதுமுடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இதற்கு விதிவிலக்கு அளித்திருந்தும், தமிழகத்தில் நெருக்கடி நிலவுகிறது
இதன் காரணமாக, உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தலையிட்டு, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025